Theme Check

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!
X

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலியில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களிடையே முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை குறைந்து வரும் நிலையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், வணிக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it