முதல் ஓட்டாக கள்ள ஓட்டு போட்டவர் கைது !!
முதல் ஓட்டாக கள்ள ஓட்டு போட்டவர் கைது !!

சென்னை திருமங்கலம் 104ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், சென்னை திருமங்கலம் 104ஆவது வார்டில், இளைஞர் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டு போட்டார்.
அப்போது, அங்கிருந்த தேர்தல் முகவர்கள் சந்தேகத்தின்பேரில் அந்த இளைஞரை பிடித்து, வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி சரி பார்த்தனர். அதில் அந்த அட்டை போலியானது என தெரியவந்தது. இதையடுத்து, அவரை மடக்கிபிடித்து திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

அதில், அவர் அயனாவரம் எட்டியப்பன் தெருவை சேர்ந்த உதயகுமார் (19) என்பதும், கள்ள ஓட்டு போட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டது தொடர்பாக திமுக, அதிமுக, சுயேட்சை வேட்பாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அங்கு அரை மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
newstm.in

