டூபாக்கூர் பெண் மருத்துவர்!! அநியாயமாய் உயிரிழந்த பெண்மணி!!
போலி பெண் மருத்துவரால் மூதாட்டி பலி!! தவறான சிகிச்சையில் ஏற்பட்ட அவலம்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சேர்ந்த தொண்டிராஜ் என்பவரது மனைவி அழகம்மாள்(60). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த பிப்.15ம் தேதி தொண்டியில் உள்ள நிலா கிளினிக்கில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் அழகம்மாள் இறந்து விட்டதாக, அவரது மகன் முருகேசன் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் கிளினிக்கை நடத்தி வந்த பாபி ராஜலெட்சுமி என்பவர் 10ஆம் வகுப்பு மற்றும் அழகுக் கலை பயிற்சியும் மட்டும் முடித்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த மருத்துவச் சான்றிதழில், 1987ஆம் ஆணடு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர் என உள்ளது. ஆனால் அந்த சான்றிதழ் தற்போது ஹைதராபாதில் மருத்துவராக பணியாற்றும் ஒருவரது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பாபி ராஜலெட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பீட்டர், கலந்தர் ஆசிக் அகமது, செல்வம், சுரேந்திரன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
newstm.in


