வீடு வீடாக கஞ்சா விற்பனை செய்த போலி சாமியார்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் !!
வீடு வீடாக கஞ்சா விற்பனை செய்த போலி சாமியார்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் !!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கஞ்சா பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சாவுக்கு அடியாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ராயபேட்டை, மைலாப்பூர், ஐஸ் ஹவுஸ் பகுதியில் மக்களுக்கு குறி சொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மைலாப்பூர் தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த தாமு(எ) சேகர்(50) என்பவரை பின்தொடர்ந்தனர். பின்னர் அவரிடம் கஞ்சா வாங்குவது போல்சென்று நடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தாமு(எ) சேகர் என்பவர் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு அப்பகுதி அப்பாவி மக்களுக்கு குறி சொல்வது போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக சில ஆண்டுகளாக இதனை அவர் செய்து வந்துள்ளார். மேலும், கஞ்சா விற்பது குறித்து யாருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சாமியார் வேடம் அணிந்து சாமியாராக வலம் வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
குறிப்பாக தாமு(எ) சேகர் கோவில்கள் அருகில் மாலை நேரங்களில் அமர்ந்து ஆடைக்குள் மறைத்து கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவருக்கு மேல் இரண்டு பேர் கஞ்சா வியாபாரியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில், தேனியைச் சேர்ந்த ராஜா மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசைதம்பி ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

