Theme Check

மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்... ஆளும்கட்சி எம்.பி.க்கே போலி தடுப்பூசி!!

மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்... ஆளும்கட்சி எம்.பி.க்கே போலி தடுப்பூசி!!

மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்... ஆளும்கட்சி எம்.பி.க்கே போலி தடுப்பூசி!!
X

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், கடந்த ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இப்போது குறைந்துள்ளதால் இதைப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகளை ஒன்றிய அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாமையே சிலர் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக் கணக்கானோருக்குப் போலி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகையும் திரிணாமுல் எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தியும் இந்தப் போலி முகாமிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றுள்ளார். அங்கேயே அவர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து சில மணி நேரம் ஆன பிறகும்கூட தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் அவருக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலேயே போலி தடுப்பூசி முகாம் குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் எம்.பி மிமி சக்ரவர்த்தி கூறுகையில், “ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு 3-ம் பாலினத்தவருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தடுப்பூசி முகாமை நடத்துவதாகவும் அதில் சிறப்பு விருந்தினராக என்னைக் கலந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுத்தார். அங்கு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நான் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

ஆனாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான உறுதி செய்யும் மெசேஜ் எனக்கு வரவில்லை. அங்கு சுமார் 25-0க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தடுப்பூசி போட வந்தவர்களின் ஆதார் தகவல்களை அவர்கள் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். ஆனாலும், உறுதிப்படுத்தும் மெசேஜ் வரவில்லை. அதனால் தான் நான் புகார் அளித்தேன்” என்றார்.

போலி வேக்சின் முகாமில் ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவருக்கே போலி தடுப்பூசி போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it