மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் போலி வாக்களர் அட்டை.. கத்தை கத்தையாக சிக்கியதால் பரபரப்பு..!!
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் போலி வாக்களர் அட்டை.. கத்தை கத்தையாக சிக்கியதால் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஸ்ரீ ராகவேந்திரா பிரின்டர்ஸ் என்ற கம்யூட்டர் சென்டர் இயங்கி வந்துள்ளது. இதனை சுரேஷ் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். இந்த சென்டரில், நடுவந்தல் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக திருத்தம் செய்துள்ளார்.
இதையடுத்து, போலியாக திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி, செல்வராஜ் தனது ஆதார் அட்டையிலும் திருந்தம் செய்ய முயன்றுள்ளார். திருத்தம் பணியில் ஈடுபட்ட அதிகாரி, செல்வராஜ் கொடுத்த அடையாள அட்டையை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார். மேலும், இது தொடர்பாக தாசில்தாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் அடையாள அட்டையை சோதித்து பார்த்த போது, அதில் இருப்பது தேர்தல் பதிவு அதிகாரியின் கையொப்பம் இல்லை என்பதும், அது போலியான வாக்காளர் அடையாள அட்டை என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக திண்டிவனம் துணை ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வராஜிடம் விசாரித்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுரேஷின் கம்ப்யூட்டர் சென்டருக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டதில், போலியான ஆவணங்களை வைத்து அந்த சென்டரில் தயாரித்து கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. அதையடுத்து இதற்கு பயன்படுத்தப்பட்ட 3 சி.பி.யு, பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த சென்டருக்கு அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

எனினும், அந்த சென்டரின் உரிமையாளர் சுரேஷ் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிடங்கல் வி.ஏ.ஓ அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

