6 மாதத்திற்கு முன்பு குடியேறிய குடும்பம் தீ விபத்தில் சடலமாக மீட்பு !!
6 மாதத்திற்கு முன்பு குடியேறிய குடும்பம் தீ விபத்தில் சடலமாக மீட்பு !!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். பங்காருநாயுடு (50), மனைவி நிர்மலா(44), தீபக்(21), காஷ்யக் (19) ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்தனர்.
பஹ்ரைன் நாட்டில் வசித்து வந்த இந்த குடும்பம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் விசாகப்பட்டினம் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா இல்லை இவர்கள் விபத்தில் தான் இறந்தார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
Tags:
Next Story

