Theme Check

பிரபல நடிகர் – நடிகை நிச்சயதார்த்தம்!!

பிரபல நடிகர் – நடிகை நிச்சயதார்த்தம்!!

பிரபல நடிகர் – நடிகை நிச்சயதார்த்தம்!!
X

பிரபல நடிகர் ஆதி மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளி படங்களிலும் நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த 'டார்லிங்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவரும் தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இதில், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு படங்களில் நடித்தனர்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.


கடந்த 24ஆம் தேதி, தங்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்ததாகவும், நிகழ்ச்சியில் இருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடிக்கு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it