பிரபல நடிகர் வீட்டை விட்டு வெளியேற தடை!!
பிரபல நடிகர் வீட்டை விட்டு வெளியேற தடை!!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டை விட்டு வெளியேற தேர்தல் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப் சட்ட மன்றத் தேர்தலில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மொகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சோனு சூட் வாக்குப்பதிவு மையம் ஒன்றில் நுழைய முற்பட்டு இருக்கிறார். காரில் வந்த அவரை மடக்கிய அதிகாரிகள் அவரை வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் சோனு சூட் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பல்வேறு வாக்குப்பதி மையங்களில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளன. சில மையங்களில் பணம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் முறையாக நடைபெறுகிறதா என்று சோதனை செய்வதும் அதை உறுதி செய்வதும் எங்களுடைய கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தது என்று சோனு சூட் கூறியுள்ளார்.
newstm.in

