Theme Check

மாரடைப்பால் பிரபல நடிகர் திடீர் மரணம்!!

மாரடைப்பால் பிரபல நடிகர் திடீர் மரணம்!!

மாரடைப்பால் பிரபல நடிகர் திடீர் மரணம்!!
X

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் தயால் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 51.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த இவர் ககார்: லைஃப் ஆன் தி எட்ஜ், விருத், ரங்கதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக அமிதாப் தயாலின் உயிர் பிரிந்துள்ளது.

அவர் மரணமடைந்த தகவலை அவரது மனைவியும் தயாரிப்பாளருமான மிருனாளினி பாட்டீல் உறுதி செய்துள்ளார். இன்று காலை 4.30 மணிக்கு அமிதாப் தயாலின் உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

amitabh dayal1

அமிதாப் தயாலுக்கு கடந்த 17ஆம் தேதி கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

பின்னர் கொரோனா தொற்று நெகட்டிவ்வான நிலையில் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

amitabh dayal1

இந்நிலையில் அமிதாப் தயால் இன்று சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் தயாலின் இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it