2வது மனைவியை விவாகரத்து செய்கிறார் பிரபல நடிகர்..!
2வது மனைவியை விவாகரத்து செய்கிறார் பிரபல நடிகர்..!

தமிழில் ‘மனைவி ஒரு மாணிக்கம்’, ‘ஜாதி மல்லி’, ‘ஐந்தாம் படை’, ‘பொன்னர் சங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் முகேஷ். மலையாளத்தில் இவர் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். அத்துடன், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர், கடந்த 2011ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கு காரணமாக, முகேஷ் ஒரு குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் சரிதா குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, பரதநாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை கடந்த 2013ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார் முகேஷ். தற்போது முகேஷுக்கு வயது 64 ஆகிறது. இந்நிலையில், முகேஷ் - தேவிகா குடும்ப வாழ்க்கையில் மணமுறிவு ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய தேவிகா, “முகேஷ் நல்ல கணவர் இல்லை; 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது. எனவே தான் அவரை பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என்று தெரிவித்துள்ளார்.

