பிரபல நடிகர் காலமானார் ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

பிரபல நடிகர் காலமானார் ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

பிரபல நடிகர் காலமானார் ! ரசிகர்கள் அதிர்ச்சி !!
X

பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

1983ஆம் ஆண்டு, 'ஏக் ஜான் ஹைன் ஹம்' என்கிற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் ராஜீவ் கபூர். இதனையடுத்து, 1985 -ம் ஆண்டு 'ராம் தேரி கங்கா மைலி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக வலம் வந்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.இதனைத்தொடர்ந்து, ஆஸ்மான், லவ்வர் பாய், ஜபர்தஸ்த், ஹம் தோ சலே பர்தேஸ் மற்றும் ஜிம்மேதார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். மேலும், கடந்த 1996 -ம் ஆண்டு முதல் இயக்குநராகவும் அறிமுகமானார்.

இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கரீஷ்மா, கரீனா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

ராஜீவ் கபூரின் மூத்த சகோதரி ரீது நந்தாவும், ஏப்ரல் மாதம் சகோதரர் ரிஷி கபூரும் காலமான நிலையில், தற்போது, ராஜீவ் கபூர் காலமாகியுள்ளார்.




Tags:
Next Story
Share it