பிரபல நடிகர் காலமானார் ..!!

பிரபல நடிகர் காலமானார் ..!!

பிரபல நடிகர் காலமானார் ..!!
X

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் காளிதாஸ் காலமானார்.

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞராக வலம் வந்தவர் காளிதாஸ். வடிவேலு உடன் பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். 'மர்ம தேசம்' தொடரில் வரும் இவருடைய குரல் மிகவும் பிரபலம். மேலும், பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார்.வடிவேலுவுடன் ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார் .சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். இறுதியாக 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.

1

வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகர் காளிதாஸ்.சில மாதங்களாக காளிதாஸின் ரத்தத்தில் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.உடனடியாக அவருக்கு ரத்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, அதுவும் மாற்றப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

காளிதாஸின் மனைவி வசந்தா முன்னரே காலமாகிவிட்டார் . காளிதாசுக்கு விஜய், பார்கவி என இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பார்கவி திரைப்படத் துறையில் இணை இயக்குனராக உள்ளார்.

இவரது மறைவிக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it