பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் பிரபல நடிகர்..!!
பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் பிரபல நடிகர்..!!

ரசிகர்களால் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்படும் சீனிவாசன் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'லத்திகா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதன்பிறகு 'கன்னா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்து கவனம் ஈர்த்தார்.

இதையடுத்து அவர் காமெடி கதாப்பாத்திரங்களிலும், ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். காமெடி திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவர் சினிமாவில் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார். சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகர் பவர் ஸ்டார்,கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

