கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் பிரபல நடிகர்..!
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் பிரபல நடிகர்..!

திரைப்படங்களில், தன் அதிரடி சண்டை மற்றும் சாகச திறமையை வெளிப்படுத்தி உலக அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஜாக்கி சான் (67). நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த, அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தியது.
இதை எதிர்த்து, ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும் போது நேரடியாக உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமையடைகிறேன்.
ஐந்து நட்சத்திரங்களை உடைய நம் சிவப்புக் கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அந்தக் கட்சியில் உறுப்பினராக இணைய ஆர்வமாக இருக்கிறேன்” என அவர் பேசினார்.

