Theme Check

ஒரே நாளில் 8 கறுப்பு நிற கார்களை வாங்கிய பிரபல நடிகர்.. எதற்காக தெரியுமா..?

ஒரே நாளில் 8 கறுப்பு நிற கார்களை வாங்கிய பிரபல நடிகர்.. எதற்காக தெரியுமா..?

ஒரே நாளில் 8 கறுப்பு நிற கார்களை வாங்கிய பிரபல நடிகர்.. எதற்காக தெரியுமா..?
X

நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், ஒரே நாளில் 1.50 கோடி ரூபாய்க்கு 8 கறுப்பு நிற கார்களை வாங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் மாதம் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
8 கருப்பு கலர் வாகனங்களை வாங்கிய பவன் கல்யாண் - Pawan kalyan bought 8 black  colour cars
அதற்காக தன்னுடன் பாதுகாப்புக்கும், பிரச்சாரத்துக்கும் கட்சி நிர்வாகிகள் வருவதற்கு வசதியாக 8 ஸ்கார்பியோ கார்களை நேற்று முன்தினம் வாங்கியுள்ளார் பவன் கல்யாண். கறுப்பு நிறத்தில் உள்ள இந்த 8 கார்களின் விலை ரூ.1.50 கோடியாகும்.

'சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த பிரச்சார பயணத்தை பவன் கல்யாண் மேற்கொள்கிறார். அதற்காக, இப்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளையும் அவர் தள்ளிப் போட்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டு முதல் அவர் எந்த படமும் நடிக்க மாட்டார். கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பவன் கல்யாண் பெரிய சக்தியாக மாறி இருப்பார்’ என, அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Next Story
Share it