தவறி விழுந்து கோமாவுக்கு சென்ற பிரபல நடிகர் !! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..

தவறி விழுந்து கோமாவுக்கு சென்ற பிரபல நடிகர் !! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..

தவறி விழுந்து கோமாவுக்கு சென்ற பிரபல நடிகர் !! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..
X

பிரபல நடிகர் சிவராம் தனது வீட்டி வழுக்கி விழுந்ததால் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னட திரை உலகில் பெரும் புகழ் பெற்றவர் பிரபல நடிகர் சிவராம். அவர் முதன் முதலில் 1965ஆம் ஆண்டு 'பெரத ஜீவ' என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் கதாநாயனாக பல படங்களில் நடித்துள்ளார். அவர் பல படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார். தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நடிகர் சிவராம், அண்மையில் மறைந்த நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கால் தவறி வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

hospital
உடனே அவரை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடிகர் சிவராம் சுய நினைவு இல்லாமல் கோமாவில் உள்ளார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it