சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர்.... பெண் குழந்தைக்கு அவர் பெயரையே வைத்த பெற்றோர்..!

சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர்.... பெண் குழந்தைக்கு அவர் பெயரையே வைத்த பெற்றோர்..!

சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர்.... பெண் குழந்தைக்கு அவர் பெயரையே வைத்த பெற்றோர்..!
X

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதல் அலையை விட இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் கொடூரமாக உள்ளது.

கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களும் முன்வந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த ஆண்டில் இருந்தே மக்களுக்கு பெருவாரியாக உதவி வருவது நடிகர் சோனு சூட். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, ‘ரியல் ஹீரோ’ என்று புகழ் பெற்றவர்.நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தவர்.

இவர், தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி, மும்பையில் உள்ள அவருடைய வீடு தேடி வரும் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் உதவி வருகிறார். இவருடைய சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜஸ்தான் போஜ்பூரியை சேர்ந்த தம்பதிகளுக்கு பிறந்த பெண் குழந்தை, பிறகு போதே உடல் நல கோளாறுதான் பிறந்துள்ளது. தங்களது பிஞ்சு குழந்தையின் சிகிச்சைக்காக பல இடங்களில் உதவிக்காக இந்த தம்பதிகள் அழைத்தனர். அப்போது தங்களுடைய குழந்தையின் உயிரை காப்பாற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவை படும் பணம் குறித்து கூறி சோனு சூட்டிற்கு கோரிக்கை ஒன்றை வைத்தனர். இவர்களை பற்றி அறிந்ததும் சோனு சூட் உடனடியாக, குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்தார்.

தங்களது குழந்தையின் உயிரை காப்பாற்றிய சோனு சூட்டிற்கு அந்த தம்பதிகள், தங்களுடைய குழந்தைக்கு 'சோனு' என பெயர் வைத்துள்ளனர். மேலும் சோனு சூட்டிற்கு வாழ் நாள் முழுவதும் நன்றியுடன் இருப்போம் என தெரிவித்துள்ளனர்.


Tags:
Next Story
Share it