செல்போனை தட்டிவிட்ட பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!!
நம்மூர் மார்கண்டேயன் நடிகர் சிவக்குமார் பாணியில், செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான்கான் தட்டிப் பறித்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதுமே செல்ஃபி புள்ள என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுத்து அசத்துகிறார்கள் இளசுகள். இந்த செல்ஃபி புகைப்படங்களை எடுப்பதற்கு வரைமுறைகளும் கிடையாது. விவஸ்தையும் கிடையாது. பற்றியெறிகிற நெருப்பாக இருந்தாலும் சரி, குப்புற விழுந்து கிடக்கும் பேருந்தாக இருந்தாலும் சரி, அந்தரத்தில் தொங்கும் குழந்தையானாலும் சரி... எதைப் பற்றியும் கவலையும், அக்கறையும் இல்லாமல் செல்ஃபி எடுத்து நாலு லைக்ஸ்களைக் குவிக்க சொல்லும் வினோத மனசு இளசுகளிடம் அதிகரித்து வருகிறது.
Salmankhan's selfie Fan #SalmanKhan #BollywoodStars pic.twitter.com/Ygwz8jrPPW
— newstm (@newstmlive) January 28, 2020
நம்மூர் மார்கண்டேயன் நடிகர் சிவக்குமார் பாணியில், செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான்கான் தட்டிப் பறித்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதே படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு சல்மான்கான் வந்திருந்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் சல்மான் நடந்து வந்த போது, சல்மான்கானுக்கு முன்பாக அவரது ரசிகர் ஒருவர், ஓடோடி வந்து ஆசையாசையாய் செல்ஃபி எடுக்க முயன்றார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த சல்மான், நடந்து வந்தபடியே பாய்ந்து சென்று அவரது செல்போனை தட்டி பறித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.
சல்மான்கானுடன் செல்ஃபி எடுக்க முயன்றவர், கோவா விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர். இதுகுறித்து அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. இருந்தாலும் சல்மான்கானின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
newstm.in

