பிரபல நடிகரின் மகன் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமனம்..!

பிரபல நடிகரின் மகன் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமனம்..!

பிரபல நடிகரின் மகன் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமனம்..!
X

தமிழ்த் திரையுலகில் 1980 மற்றும் 1990 காலகட்டங்களில் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்தவர் சின்னி ஜெயந்த். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என, ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

நடிப்பை தாண்டி மிமிக்ரி செய்வதன் மூலம் அதிகம் பிரபலமானார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். தற்போது, விஜய் சேதுபதின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது ரேங்க் பெற்றார். இந்நிலையில், தற்போது அவர் தூத்துக்குடி மாவட்ட சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது தந்தை சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக, தான் பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார் ஸ்ருதன்.

Tags:
Next Story
Share it