பிரபல நடிகைக்கு கொரோனா.. குடும்பத்தினருக்கும் சிகிச்சை தீவிரம் !
பிரபல நடிகைக்கு கொரோனா.. குடும்பத்தினருக்கும் சிகிச்சை தீவிரம் !

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு. கடந்த 1ஆம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தைத் தாண்டி அதிர்ச்சி அளித்தது.

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட்டைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக தீபிகா படுகோன் பெங்களூருவில் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து தீபிகாவோ, ரன்வீரோ தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இன்னும் உறுதி செய்யவில்லை.
newstm.in

