44 வயதில் 2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை!
44 வயதில் 2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை!

கொரோனா காலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களுக்குள் அனுமதி கிடையாது என்பதால், கோயில் வாசலில் தாலி கட்டிக் கொண்டு புதுமண தம்பதிகள் குடும்பம் நடத்த கிளம்பி விடுகிறார்கள்.
இந்நிலையில், பிரபல நடிகையான பிரேமா, தனது 44வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தமிழில் சத்யராஜூடன் அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள், தாயே புவனேஸ்வரி போன்ற படங்களில் நடித்தவர். கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 28 படங்களில் நடித்து இருக்கிறார்.

மோகன்லால் ஜோடியாக இவர் நடித்த பிரின்ஸ் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்று தந்தது. சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்ற என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டு பின்னர், கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் நடிகை பிரேமா 2வது திருமணத்திற்கு தயாராக உள்ளதாகவும், தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

