அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - பிக்பாஸ் நடிகை வேண்டுகோள் !!
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - பிக்பாஸ் நடிகை வேண்டுகோள் !!

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதனால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் தடுப்பு செலுத்திக் கொண்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.
தமிழில் வெளியான ‘ஜோக்கர்’ படம் மூலம் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். எனினும், தமிழ் திரைத்துறையில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருந்தது.அப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியில் இறுதுவரை சென்றார். எனினும், அவரால் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கான ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது.தற்போது சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

