Theme Check

பிரபல நடிகை சுட்டுக்கொலை.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி !!

பிரபல நடிகை சுட்டுக்கொலை.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி !!

பிரபல நடிகை சுட்டுக்கொலை.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி !!
X

பிரபல நடிகை ஒருவர் வீடு புகுந்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் பிரபல டி.வி நடிகை அம்பிரீன் பட் (Ambreen Bhat). அங்குள்ள பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியில் இருக்கும் தனது வீட்டில் நடிகை அம்பிரீன் பட் இருந்துள்ளார்.

jammu actor

இந்நிலையில், நேற்றிரவு யாரும் எதிர்பார்க்காத விகையில் நடிகை அம்பிரீ மின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். அவர் சுதாகரிப்பதற்குள் அம்பிரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். துப்பாக்கிச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

எனினும் பயங்கரவாதிகள் தப்பியோடினர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அம்பிரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கி குண்டு காயத்தால் படுகாயமடைந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

jammu actor

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர். பிரபல நடிகை ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.


newstm.in

Next Story
Share it