ஊரடங்கில் காதலனுடன் ஊர் சுற்றிய பிரபல நடிகை! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
ஊரடங்கில் காதலனுடன் ஊர் சுற்றிய பிரபல நடிகை! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறி காதலனுடன் காரில் ஊர் சுற்றிய நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் இளம் நடிகை திஷா பதானி. இவர் 2015ஆல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் நடத்தி திரையுலகில் அறிமுகமானார். அடுத்து சில படங்களில் நடித்துவந்த அவர் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார்.

தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அண்மையில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இதனால் அவர் இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.
இந்த நிலையில், நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார். தற்போது ஊரடங்கு உள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் வீடுகளில் உள்ளனர். அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், திஷா பதானி தனது காதலன் டைகர் ஷெராப் உடன் ஊரடங்கு விதிகளை மீறி காரில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த மும்பை போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
newstm.in

