Theme Check

போதையில் கார் ஓட்டி போலீஸிடம் ரகளை செய்த பிரபல நடிகை!!

போதையில் கார் ஓட்டி போலீஸிடம் ரகளை செய்த பிரபல நடிகை!!

போதையில் கார் ஓட்டி போலீஸிடம் ரகளை செய்த பிரபல நடிகை!!
X

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது செய்யப்பட்டார்.

மும்பையை சேர்ந்த நடிகை காவ்யா தாப்பர் நடிகர் ஆரவ் உடன் மார்க்கெட் ராஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதேபோல், ஒருசில தெலுங்கு, இந்தி படங்களிலு நடித்துள்ளார்.

மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற காவ்யா இரவு ஒரு மணியளவில் காரில் வெளியே வந்துள்ளார். அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

kavya_thapar

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காவ்யா தாப்பரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசரிடம் ரகளையில் ஈடுபட்ட காவ்யா தாப்பர், பெண் காவலாளி ஒருவரின் சீருடையை இழுத்து தாக்க முயன்றார்.

இதையடுத்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை பைகுலா மகளிர் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it