இலவச கொரோனா தடுப்பூசி வழங்கிய பிரபல நடிகை !!

இலவச கொரோனா தடுப்பூசி வழங்கிய பிரபல நடிகை !!

இலவச கொரோனா தடுப்பூசி வழங்கிய பிரபல நடிகை !!
X

பெங்களூருவை சேர்ந்த நடிகை ப்ரணிதா சுபாஷ் கடந்த 2010-ம் ஆண்டு போக்கிரி என்ற கன்னட படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த அவர் 2011-ல் வெளியான உதயன் என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானார்.

பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அதர்வா உடன் 2017-ம் ஆண்டு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடத்தவர் அதன்பிறகு தமிழ் திரையுலகம் பக்கம் வரவே இல்லை.

தற்போது கொரோனா 2-வது அலை பரவி வரும் சூழலில் தனது அறக்கட்டளை மூலம் தொடர்ச்சியாக கொரோனா நிவாரணப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கிக்கொடுப்பது என பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், தனது அறக்கட்டளையில் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, பெங்களூருவில் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி முகாம் அமைத்து ஆர்.வி மருத்துவமனையில் தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசியை வழங்கினார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

Tags:
Next Story
Share it