கொரோனா ஊரடங்கில் திடீர் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை..!
கொரோனா ஊரடங்கில் திடீர் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை..!

தமிழில் கவுரவம் படத்தில் நடித்தவர் யாமி கவுதம். தொடர்ந்து தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தியில் பல படங்களில் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார்.
விக்கி டோனர், காபில், ஆக்ஷன் ஜாக்சன் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் ஹீரோயினாக நடித்து தடம் பதித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் இயக்குநர் ஆதித்யா தர் இருவருக்கும் பெற்றோர் சம்மத்துடன் பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்துள்ளனர். ஆதித்யா தர் தேசிய விருது வென்ற யூரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள நடிகை யாமி கவுதம். குடும்பத்தினரின் வாழ்த்துக்களுடன் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற எங்களுடைய திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த பந்தத்தை அன்பு மற்றும் நட்புடன் நாங்கள் தொடங்குகிறோம். அதற்குர் அனைவரும் எங்களுக்கு வாழ்த்துக்களை கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
With the blessings of our family, we have tied the knot in an intimate wedding ceremony today.
— Yami Gautam (@yamigautam) June 4, 2021
As we embark on the journey of love and friendship, we seek all your blessings and good wishes.
Love,
Yami and Aditya pic.twitter.com/W8TOpAJxja
பெங்களூருவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை ப்ரிணிதா சுபாஷின் திருமணம் திடீரென்று நடந்தது. அதை தொடர்ந்து நடிகை யாமி கவுதமும் முன்னறிவுப்பு ஏதுமின்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் பாலிவுட் உலகம் பரபரப்பாகியுள்ளது.

