அம்மாவின் திருமண புடவையை உடுத்தி திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..!

அம்மாவின் திருமண புடவையை உடுத்தி திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..!

அம்மாவின் திருமண புடவையை உடுத்தி திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..!
X

தமிழில் பயணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யாமி கவுதம். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஜூன் 4-ம் தேதி பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்துகொண்ட தகவலை அனைவருக்கும் வெளியிட்டு ஆச்சரியம் ஏற்படுத்தினார். சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை பொழிந்தனர்.

ஊரடங்கு நேரத்தில் கூட்டத்தை அதிகம் சேர்க்க வேண்டாம் என்று கருதி மணமக்கள் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதனால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் யாமி கவுதம் மற்றும் ஆதித்யா தர் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் திருமணத்தின் போது யாமி கவுதம் அணிந்திருந்த புடவையை குறித்த சுவாரஸ்யமான பின்னணி வெளியாகியுள்ளது. அதே புடவையை அணிந்துகொண்டு தான் யாமி கவுதமின் தாயார் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கிட்டத்தட்ட முப்பது மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து தன்னுடைய திருமணத்திற்கு உடுத்தியுள்ளார் யாமி. மேலும் அன்றைய நாளில் தனக்கான ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தையும் யாமி கவுதம் சொந்தமாக செய்துகொண்ட விபரம் தெரியவந்துள்ளது.

Tags:
Next Story
Share it