Theme Check

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை!!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை!!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை!!
X

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தைபெற்றுகொண்டதாக பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

priyanka_chopra nick_jonas

இந்த சிறப்புமிக்க நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விசயங்களுக்கு மதிப்பு அளிக்க கேட்டுகொள்கிறோம், மிக்க நன்றிஎன்று தெரிவித்துள்ளனர்.

என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது குறித்து பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், அமெரிக்க ஊடகம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it