Theme Check

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் காலமானார்..!

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் காலமானார்..!

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் காலமானார்..!
X

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண. சிற்சபேசன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

கடந்த 1934ம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்த கண. சிற்சபேசன், சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய போது நீதிபதி ஏ.ஆர் லட்சுமணன், சாலமன் பாப்பையா, முன்னாள் அமைச்சர்கள் காளிமுத்து, தமிழ் குடிமகன் ஆகியோர் இவரது மாணவர்களாக திகழ்ந்தனர்.
image
சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய கண. சிற்சபேசனுக்கு கிருபானந்த வாரியார் ‘நகைச்சுவை இமயம்’ எனும் பட்டம் வழங்கினார். அத்துடன் அவருக்கு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கம்பன் விருது கொடுக்கப்பட்டது.

தமிழ் பட்டிமன்ற மரபின் முதன்மையாக விளங்கிய கண. சிற்சபேசன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவின் முன்னோடியாக விளங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர்.

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண.சிற்சபேசன், நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னை திருவொற்றியூரில் உள்ள மின் மயானத்தில் இன்று நடைபெற உள்ளது.

Next Story
Share it