லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்...!!

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்...!!

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்...!!
X

ஜேடி மற்றும் ஜெர்ரி இரட்டை இயக்குநர்கள் இயக்கி வரும் சரவணன் அண்ணாச்சி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல விளம்பர பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி வருகின்றனர்.இவர்களுடைய இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளன. சரவணன் அண்ணாச்சி நடக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஹீரோயினாக யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு பெரியளவில் இருந்தது. இதற்காக கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஹாரீஸ் ஜெயராஜ் ஏற்றுள்ளார், ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் பணியாற்றி வருகிறார். இந்தாண்டுக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.


Tags:
Next Story
Share it