Theme Check

பிரபல தொழிலதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

பிரபல தொழிலதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

பிரபல தொழிலதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!
X

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அரசியல்வாதியுமான டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரபல டசால்ட் விமான உற்பத்தி நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆலிவர் டசால்ட். மிகப்பெரிய தொழிலதிபரான இவர் பிரான்ஸ் நாட்டின் மத்திய வலது குடியரசு கட்சியின் எம்.பியாகவும் பதவி வகித்து வந்தவர்.

செர்கே டசால்ட் என்பவரின் மூத்த மகனான இவர் ரபேல் போர் விமானங்களை கட்டும் தொழிலை செய்து வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் பாரீஸ் நகரருகே பியூவாயிஸ் என்ற பகுதியில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரார்டு டார்மனின் ஆகியோருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் டசால்ட் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பிரான்சின் வடக்கே நார்மாண்டி பகுதியில் டசால்ட் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது காலாவ்டோஸ் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் ஆலிவர் டசால்ட் பலியானார்.

டசால்ட் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். அதில், நம்முடைய நாட்டிற்கு சேவையாற்றும் பணியை டசால்ட் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது. அவரது திடீர் மரணம் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it