விதவையை விரும்பும் பிரபல இசையமைப்பாளர்..!
விதவையை விரும்பும் பிரபல இசையமைப்பாளர்..!

விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இவர், கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அறிவித்திருந்தார்.
இமானின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து, அவருடைய பெற்றோர் இமானுக்கு பெண் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சமீபத்தில், தனது மறுமணம் குறித்து இமான் பேசினார்.
அப்போது, “நான் மறுமணம் செய்து கொள்ளும் பெண் கட்டாயம் விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்காவது தாயாக இருக்கவேண்டும். தனது குழந்தைகளுக்கு அம்மா இடத்தை நிரப்ப வேண்டும்” எனக் கூறினார்.
Next Story

