அதிர்ச்சி.. பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்..!
அதிர்ச்சி.. பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், இடது கை பேட்ஸ்மேனுமான ராட் மார்ஷ், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அடிலெய்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராட் மார்ஷ், இன்று (4-ம் தேதி) காலை காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், இடது கை பேட்ஸ்மேனுமான ராட் மார்ஷ், 1970 மற்றும் 1984-க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 பேரை ஆட்டமிழக்கச் செய்தார்.
இது, அவருடைய காலத்தில் உலக சாதனையாக கருதப்பட்டது. டெஸ்டில் 3633 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். இவர் இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் சிறிது காலம் செயல்பட்டுள்ளார்.

இதன் மூலம் இரு நாட்டுக்காக தேர்வுக்குழு தலைவராக இருந்த ஒரே வீரர் என்ற பெருமையையும் மார்ஷ் படைத்திருந்தார். மார்ஷ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் இருந்துள்ளார். அப்போதுதான் ராட் மார்ஷ் கீழ் ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரட் லீ போன்ற வீரர்கள் பட்டை தீட்டப்பட்டனர்.

