பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம் !!

பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம் !!

பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம் !!
X

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராஜ் கவுசல் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நடிகர் மந்திரா பேடியின் கணவர், திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் கவுசல் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். திரைப்படத் தயாரிப்பாளர் ஒனிர் சமூக ஊடகங்களில் இதன உறுதிசெய்தார்.

எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் தனது வாழ்க்கையில் பல மபரிமானங்களை கொண்டவர் ராஜ். 1999ல் வெளிவந்த பியார் மே கபி கபி படத்தை ராஜ் கவுசல் இயக்கினார். இப்படம் அவருக்கு பெரும் வெற்றியையும் புகழையும் ஏற்படுத்தி கொடுத்தது. அடுத்ததாக ஷாடி கா லடூ மற்றும் அந்தோணி கவுன் ஹாய் ஆகிய படங்களையும் அவர் இயக்கினார்.

அதோடு 800 க்கும் மேற்பட்ட விளம்பரங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்தப்போது திடீரென ராஜ் கவுசலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it