பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி ..!!

பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி ..!!

பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி ..!!
X

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.தற்போது விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது மருத்துவமனையில் தான் சிகிச்சை பெரும் முதற்கட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் குணமடைந்து வீடு திரும்ப ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும் என கூறப்படுகிறது.

அதில், எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இன்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன் ஒரு வாரத்தில் வீடு திரும்புவேன். நலம் பெற்றவுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அர்ச்சனா விரைவில் நலம்பெற சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it