Theme Check

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு!
X

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான டு பிளெசிஸ் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, 36 வயதான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான டு பிளெசிஸ் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.


டு பிளெசிஸ் இதுவரையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4163 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ரன் குவிப்பில், 10 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்வதற்கு இது தான் சரியான நேரம்’ என்று தெரிவித்துள்ளார்.


கடந்த 2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி மூலம் அறிமுகமான டு பிளெசிஸ், கடந்த டிசம்பரில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 199 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டு பிளெசிஸ் அடித்த அதிக ரன்கள் இது தான்.

Tags:
Next Story
Share it