பிரபல பாடகர் கானா பாலா தோல்வி..!
பிரபல பாடகர் கானா பாலா தோல்வி..!

சென்னை 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரபல பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார்.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரை விட 468 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.
இதையடுத்து நடந்த சுற்றுகளில் 8303 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்ற நிலையில், 6095 வாக்குகள் பெற்று கானா பாலா இரண்டாமிடம் பிடித்தார்.
முன்னதாக, கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே தொகுதியில் கானா பாலா போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

