எஸ்.பி.பி.க்கு பாடல் மூலம் வாழ்த்து சொன்ன பிரபல பாடகி !
எஸ்.பி.பி.க்கு பாடல் மூலம் வாழ்த்து சொன்ன பிரபல பாடகி !

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் இயற்பெயரை கொண்ட எஸ்.பி.பி பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவரும், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பின்னணி பாடகி சுவேதா மோகன், பாட்டுப்பாடி எஸ்.பி.பி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பின்னணி பாடகி சுவேதா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பாடும் நிலாவே’ பாடலை பாடி “எஸ்.பி.பி. அவர்களுடைய குரலாலும், இசையாலும் நம்முடைய வாழ்க்கை என்றைக்கும் நிறைந்திருக்கும் என நான் நம்புகிறேன். அவர் நம்முடன் தான் இருக்கிறார் என நான் தீர்க்கமாக நம்புகிறேன். எஸ்.பி.பி. சார், நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Happy 75th Birthday dear #SPB Sir 🎂🎶 We miss you here on Earth 🙏🙏🙏#HappyBirthdaySPB pic.twitter.com/dgLePOxHv9
— Shweta Mohan (@_ShwetaMohan_) June 4, 2021

