இசைக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பிரபல பாடகர்..!

இசைக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பிரபல பாடகர்..!

இசைக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பிரபல பாடகர்..!
X

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகர் மனோ. இவர் ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்தில் ‘தேன்மொழி இன்ப தேன்மொழி…’ எனும் பாடல் தொடங்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 25 ஆயிரத்திற்கு அதிகமான திரைப்படப் பாடல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு துறைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அதில், சினிமாவின் அனைத்து துறைகளும் செயல்படாத காரணத்தால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையறிந்த பாடகர் மனோ, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 200 இசைக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், மனோவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:
Next Story
Share it