Theme Check

பிரபல பாடகரின் குழந்தை பலி... சோகத்தில் ரசிகர்கள் !!

பிரபல பாடகரின் குழந்தை பலி... சோகத்தில் ரசிகர்கள் !!

பிரபல பாடகரின் குழந்தை பலி... சோகத்தில் ரசிகர்கள் !!
X

பிரபல பஞ்சாபி மற்றும் பாலிவுட் பாடகர் பி பிராக். பல வெற்றிபாடல்களை பாடிய அவர் தனது வசீகர குரலால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். பி பிராக்கின் மனைவி மீரா பச்சன் கருவுள்ள நிலையில் இதனை அவர்கள் இருவரும் மிகமகிழ்ச்சியாக உலகுக்கு அறிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் இரண்டாவது குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்கிறோம் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், மீரா பச்சனுக்கு குழந்தை பிறந்தபோதே இறந்தது என்ற செய்தி வெளியாகி அனைவரின் இதயத்தை உடைக்கும் செய்தியாக மாறியுள்ளது. இது குறித்து பாடகர் பி பிராக் சமூக வலைதளத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

b prak

ஆழ்ந்த துக்கத்துடன், நமது பிறந்த குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது என்பதை அறிவிக்க வேண்டும். பெற்றோராக நாம் கடந்து செல்லும் மிகவும் வேதனையான கட்டம் இது. முடிவில்லா முயற்சிகள் மற்றும் ஆதரவிற்காக அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த இழப்பால் நாங்கள் அனைவரும் பேரழிவிற்கு உள்ளாகிவிட்டோம், தயவுசெய்து இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும். உங்கள் மீரா & பிப்ராக்.

அவர் தனது குறிப்பில் ஆதரவளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

b prak

பி ப்ராக் இந்தச் செய்தியைப் பகிர்ந்த பிறகு, இயக்குநர் கரண் ஜோஹர், அலி கோனி, கௌஹர் கான், ராஜீவ் அடாதியா, அம்மி விர்க், நீதி மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து, இந்த துயர நேரத்தில் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it