பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!
பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
newstm.in
Next Story

