பிரபல தமிழ் நடிகர் மறைவு!!
பிரபல தமிழ் நடிகர் மறைவு!!

அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் ராமராஜ் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த ஒரு மாதமாக ராமராஜ் உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
அவரது உடல், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமராஜ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தவர். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. இவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

