Theme Check

பிரபல தியேட்டருக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

பிரபல தியேட்டருக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

பிரபல தியேட்டருக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!
X

2021 - 2022-ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள்; கட்டத் தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் பிரபலமான ஆல்பர்ட் திரையரங்கத்திற்கு பல ஆண்டுகளாக சொத்து வரியையும், கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
Chennai's Albert Theatre sealed for tax dues over Rs 50 lakhs- The New  Indian Express
இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்தது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it