பொன்னியின் செல்வன் படத்திற்காக பச்சப் பிள்ளையாக மாறிய பிரபல வில்லன்..!
பொன்னியின் செல்வன் படத்திற்காக பச்சப் பிள்ளையாக மாறிய பிரபல வில்லன்..!

தமிழ் சினிமாவில் வில்லனாக மட்டுமே நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், பொன்னியின் செல்வன் படத்திற்காக அவர் கெட்-அப் மாற்றியுள்ளது ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லால். அதை தொடர்ந்து சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதை தொடர்ந்து மருதமலை, ஓரம் போ, ஆழ்வார் போன்ற் படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
மலையாளப் படங்களில் ஹீரோவாக நடித்து தடம் பதித்திருந்தாலும், தமிழில் பெரும்பாலான படங்களில் அவர் வில்லனாகவே நடித்தார். விரைவில் வெளிவரவுள்ள ‘கர்ணன்’ படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அண்மையில் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பண்டராத்தி’ என்கிற பாடலில் சிறப்பாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் லால் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனினும், தன்னுடைய வில்லன் தோற்றத்தை மாற்றி பச்சிளம் பாலகன் போல கெட்-அப் போட்டுள்ளார் லால்.

இந்த கெட்-அப்பில் அவரை பார்க்கும் யாரும், தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகர் இவர்தான் என்பதை கூற முடியாது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவருக்கு மாறுபட்ட கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

