பிரபல WWE வீரர் மரணம் !!
பிரபல WWE வீரர் மரணம் !!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் (Butch REED) (66) இருதய நோய் கோளாறால் காலமானார். அவருடைய குடும்பத்தினருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை வீரர் பட்ச் ரீட்க்கு ஆதரவு அளித்துவந்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 1978ம் ஆண்டு நடைபெற்ற வான்கோவர் ஆல்-ஸ்டார் வெர்ட்ஸ்லிங் மல்யுத்த போட்டியில் முதன்முதலாக கால்பதித்தார். அதை தொடர்ந்து என்.டபுள்யூ, மிட்-சவுன் வெர்ட்ஸ்லிங் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு உலக கவனத்தை ஈர்த்தார்.
மிட்-சவுன் வெர்ட்ஸ் ஹெவிவெயிட் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பட்ச் ரீட், 1980-களில் உலகப் புகழ்பெற்ற டபுள்யூ. டபுள்யூ. இ மல்யுத்த போட்டிக்குள் நுழைந்தார். அங்கு ஹல்க் ஹோகன் மற்றும் ரேண்டி சேவேஜ் போன்ற பிரபலமான வீரர்களுடன் மோதி, முன்னணி வீரராக மாறினார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ரீடுக்கு இருதயம் தொடர்பான பிரச்னை இருந்து வந்தது. இதற்காக அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை எதுவும் பலனிக்காமல் போனது. அவருடைய காலகட்டத்தில் மல்யுத்த விளையாட்டில் பட்ச் ரீட் முக்கிய வீரராக இருந்தார். உலகின் தலைசிறந்த மல்யுத்த வீரராகவும் அவர் அடையாளம் காணப்பட்டார். வீரர் பட்ச் ரீட்டின் மறைவு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் துயரமாக அமைந்துள்ளது.

