பிரபல இளம் பாடகர் சாலை விபத்தில் மரணம்.. திரையுலகினர் பெரும் அதிர்ச்சி !!

பிரபல இளம் பாடகர் சாலை விபத்தில் மரணம்.. திரையுலகினர் பெரும் அதிர்ச்சி !!

பிரபல இளம் பாடகர் சாலை விபத்தில் மரணம்.. திரையுலகினர் பெரும் அதிர்ச்சி !!
X

பிரபல இளம் பஞ்சாபி பாடகர் தில்ஜான் அம்ரிஸ்டர்(31). இவர் பஞ்சாபியில் பல பாடல்களை பாடி மக்களின் மனம் கவர்ந்த பாடகராக வலம் வந்துள்ளார். இதனால் அவருக்கு அங்கு ரசிகர்களும் பெரும் அளவில் உள்ளனர்.

இந்த நிலையில், தில்ஜான் அமிர்தசரஸில் இருந்து தன் சொந்த ஊரான கர்தார்பூருக்கு தனியாக காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி தில்ஜான் உயிரிழந்தார். பிரதான சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர்.

தில்ஜான் படுவேகமாக காரை ஓட்டி வந்து டிவைடரில் மோதியதில் குப்புற கவிழ்ந்தது விபத்தில் சிக்கியதாக போலீசார் தரப்பில் தகவல் கூறப்படுகிறது.

தில்ஜானின் மனைவி மற்றும் குழந்தைகள் கனடாவில் இருக்கிறார்கள். தில்ஜான் மரணம் குறித்து அறிந்த பஞ்சாபி திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தில்ஜான் மறைவுக்கு திரையுலகினர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் பாடகர் தில்ஜான் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it