ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி.. பிரபல நடிகருக்கு திடீர் திருமணம் !!
ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி.. பிரபல நடிகருக்கு திடீர் திருமணம் !!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் பிரதானமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிபு சூரியன், திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்த நடிகர் சிபு சூரியன், ரோஜா தான் தனது கடைசி சீரியல் என்று அதிர்ச்சயை கொடுத்து இருந்தார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் ரோஜா, தொலைக்காட்சியில் எனது கடைசி சீரியலாக இருக்கும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் இதில் நடித்து வருகின்றேன். இப்போது OTT மற்றும் படங்கள் போன்ற மற்ற தளங்களில் வெவ்வேறு வேடங்களில், கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன்.
நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய போது, நான் ஒரு சராசரி நடிகராக இருந்தேன். இப்போது, நிறைய மேம்பட்டுள்ளேன். தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரியும் போது நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நிச்சயமாக, படங்கள் ஆபத்தானவை, சவால்கள் நிறைந்தவை என எனக்குத் தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

அந்தவகையில் இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா என்ற கன்னட படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இதில் ஒரு ’கிரே’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும் புகழ்பெற்ற ஒரு குழுவினருடன் தமிழிலும் நடிக்கிறேன். இப்போது அது தொடர்பான எந்த விவரங்களையும் வெளியிட எனக்கு அனுமதி இல்லை. ஆனால் நான் படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல முடியும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிபு சூரியன் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அவருடைய ரசிகர் மன்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் சிபுக்கு சின்னத்திரை நடிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

