ரசிகர்கள் செம குஷி.. அஜித்- ஹெச்.வினோத் கூட்டணியில் புதிய பட பணிகள் தொடங்கியது !
ரசிகர்கள் செம குஷி.. அஜித்- ஹெச்.வினோத் கூட்டணியில் புதிய பட பணிகள் தொடங்கியது !

வலிமையைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.
வலிமை திரைப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் தேதி குறிப்பிடப்படாமல் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.‘வலிமை’ மட்டுமின்றி ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜீத் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்தில் குறைவான ஆக்ஷன், நிறைய வசனங்கள் இருக்கும் என்றும், உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி இப்படம் பேசவுள்ளது என்றும் ஹெச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இப்படத்துக்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி இன்று ஹைதரபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
newstm.in

